Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Sat Dec 16, 2017 4:15 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 2841 posts ]  Go to page Previous  1 ... 274, 275, 276, 277, 278, 279, 280 ... 285  Next
Author Message
PostPosted: Sun Sep 20, 2009 8:48 am 
A bridge to be built across uyyakondan to extend the runway

உய்யகொண்டான் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டி திருச்சி விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடியாக நீட்டிக்க ஒப்புதல் விமான நிலைய ஆணையக்குழுமம் வழங்கியது


திருச்சி, செப்.20&
உய்யகொண்டான் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டி திருச்சி விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடியாக நீட்டிக்க விமான நிலைய ஆணைய குழுமம் ஒப்புதல் அளித்து உள்ளது.
ஓடுபாதை நீட்டிப்பு

திருச்சி விமான நிலையம் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ( எண் 210) கொட்டப்பட்டு என்ற இடத்தின் அருகில் உள்ளது. 6 ஆயிரம் அடியாக இருந்த இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை (ரன்வே) கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 8 ஆயிரம் அடியாக நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது திருச்சி விமான நிலையத்தின் மூலம் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்களை இயக்கும் சர்வதேச விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் திகழ்வதால் சர்வதேச விமான ஆணைய குழுமத்தின் அங்கீகாரத்தை பெற ஓடுபாதையின் நீளத்தை 12,500 அடியாக நீட்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஓடுபாதையை 12,500 நீட்டித்தால் உலக நாடுகளில் உள்ள அனைத்து பெரிய ரக விமானங்களும் திருச்சி விமான நிலையத்தில் இறங்குவதற்கான வசதி கிடைக்கும்.

ஆனால் ஓடுபாதையை மேலும் நீட்டிக்க முடியாமல் விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் ஓடும் பாசன வாய்க்காலான உய்யகொண்டான் குறுக்கிட்டதால், திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை சிறிது தூரத்திற்கு மூடி விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் ஓடுபாதை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான வரைபடம் தயாரித்து நிலம் கையகப்படுத்தி தரும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார்கள்.

மாவட்ட நிர்வாகமும் நிலம் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டது. ஆனால் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்காக தேசிய நெடுஞ்சாலையை மூடுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மேற்கு பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டால் குடியிருப்பு பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க வேண்டிய அபாய நிலை ஏற்பட்டது. வீடுகளை இடிப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி விமான நிலையத்தின் புதிய டெர்மினல் கட்டிடம் திறப்பு விழா நடந்த போது அதில் பேசிய மத்திய மந்திரி ப.சிதம்பரம் விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் கிழக்கு பகுதியில் மட்டுமே மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் நேரு பேசும்போது உய்யகொண்டான் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டி ஓடுபாதையை நீட்டிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதனை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் உய்யகொண்டான் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டி கிழக்கு பகுதியில் நத்தமாடிபட்டி கிராமம் வரை ஓடுபாதையை நீட்டிப்பு செய்வதற்கான புதிய திட்டத்தை தயாரித்து விமான நிலைய ஆணைய குழுமத்தின் ஒப்புதலுக்காக அனுப்பினார்கள். இந்த திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் கிடைத்து உள்ளது. எனவே மாற்றி அமைக்கப்பட்ட புதிய திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி தரும்படி விமான நிலைய அதிகாரிகள் கேட்டு உள்ளனர். தமிழக அரசினால் நிலம் கையகப்படுத்தப்பட்டு விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஓடுபாதை விரிவாக்க பணிகள் தொடங்கும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
Tags
Trichy Airport news, Updates on Trichy airport, Infrastructure development at Trichy Airport
PostPosted: Fri Sep 18, 2009 8:06 pm 
Aerobridge for only aged and patients? and not for all the passengers?


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Sep 18, 2009 6:29 pm 
Image

திருச்சி விமான நிலையத்தில் ஊனமுற்றோர், நோயாளிகள் வசதிக்கு ஏரோபிரிட்ஜ் செயல்பாடு தொடக்கம்

திருச்சி, செப். 18: திருச்சி விமான நிலைய புதிய முனைய கட்டடம் கடந்த பிப்ரவரி 21 முதல் இயங்குகிறது. இங்கு ரூ.3 கோடியில் இந்தோனேஷிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட ஏரோபிரிட்ஜ் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. உடல் ஊனமுற்றோர், நோய்வாய்ப்பட்டோர், விஐபிக்கள் டெர்மினலுக்குள் செல்லாமல் விமானத்திலிருந்து நேராக வெளியேயும், வெளியிலிருந்து விமானத்துக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட பாலம்தான் ஏரோபிரிட்ஜ். 2 ஏரோபிரிட்ஜ்கள் உள்ளன. அதில் ஒன்று கடந்த மாதம் சோதனை முறையில் இயக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதி திருச்சி வந்த விமான நிலைய ஆணைய தென்மண்டல பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார், ஏரோபிரிட்ஜின் இயக்கங்களை ஆய்வு செய்தார்.

இந்நிலையில் நேற்று முதல் ஏரோபிரிட்ஜ் இயக்கப்படுகிறது. காலை 10.15 மணிக்கு வந்த ஏர்இந்தியா விமான பயணிகள் இந்த ஏரோபிரிட்ஜ் வழியாக முதன் முதலாக வந்தனர். தொடர்ந்து விஐபிக்கள், முதியவர்கள், நோயாளிகள், உடல் ஊனமுற்றோருக்காக தொடர்ந்து இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Sep 18, 2009 6:27 pm 
விமான நிலைய விரிவாக்கப்பணி புதுகை சாலை மூடும் முடிவு ரத்து மாற்று திட்டத்துக்கு ஆணையம் அனுமதி


திருச்சி, செப். 18: விமான நிலைய விரிவாக்க பணிக்காக திருச்சி- புதுக்கோட்டை சாலையை மூடுவது என்ற முடிவு ரத்து செய்யப்பட உள்ளது. மாற்று திட்டம் தொடர் பான விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம், விமான நிலையத்தரப்பினர் அளித்து ள்ளனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் விமானங்களை கையாள ரூ.75 கோடியில் சர்வதேச முனையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. விமான நிலைய ஓடுபாதையும் 8 ஆயிரம் அடியில் இருந்து 12 ஆயிரத்து 500 அடியாக அதிகரிக்கப்பட உள்ளது. விமான நிலைய

ஓடுபாதையை அதிகரிக்க போதுமான நிலம் கையகப்படுத்துமாறு விமான நிலைய ஆணையம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, திருச்சி- புதுக்கோட்டை சாலை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மூடப்படும் என்று கடந்த ஜூனில் கலெக்டர் சவுண்டையா அறிவித்தார். இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது இம்முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்காக 439 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் புதிய டெர்மினல் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர், விமான நிலைய மேற்கு பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது என்று தெரிவித்தனர். இருப்பினும் விரிவாக்கத்திற்காக புதுக்கோட்டை சாலை மூடப்படும் என்று கலெக்டர் சவுண்டையா அறிவித்தார். இந்நிலையில் மாற்றுத்திட்டம் தயாரிக்குமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன்படி, கிழக்குப் பகுதியில் விமான நிலைய ஓடுபாதையை 12 ஆயிரத்து 500 அடியாக அதிகரிப்பதென முடிவு செய்யப்பட்டது. அதற்கு டெல்லியிலுள்ள விமான நிலைய ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மாற்று திட்ட விவரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் விமான நிலைய அதிகாரிகள் அளித்துள்ளனர். இதனால் திருச்சி- புதுக்கோட்டை சாலையை மூடும் முடிவு ரத்தாகிறது. கிழக்குப் பகுதியில் ஓடுபாதை விரிவாக்கம் செய்யும்போது உய்யக்கொண்டான் வாய்க்காலின் மேல் சர்வதேச கான்கிரீட் பாலம் அமைத்து அதன் மேல் ஓடுபாதை அமையும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. ஆனால், புதிய மின் கோபுரங்கள் திருச்சி- புதுக்கோட்டை சாலையை ஒட்டி அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

விமான நிலையத்தின் கிழக்குப் பகுதியில் நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, முடுக்குப்பட்டி, யாகப்பா நகர், கணேஷ் நகர் மற்றும் சூசை நகர் ஆகியவை உள்ளன. நிலம் கையகப்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே இப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Sep 18, 2009 7:07 am 
திருச்சி விமான நிலையத்தில் "ஏரோ பிரிட்ஜ்' சேவை தொடக்கம்

திருச்சி, செப். 17: திருச்சி விமான நிலையத்தில் "ஏரோ பிரிட்ஜ்' சேவை வியாழக்கிழமை தொடங்கியது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 79 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையக் கட்டடம் கடந்த பிப். 21-ம் தேதி திறக்கப்பட்டது.

இதில் கட்டடத்துக்கு மட்டும் ரூ. 45 கோடியும், மீதத் தொகையில் 3 நகரும் படிக்கட்டுகள், 5 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் நேரடியாக விமானத்தில் ஏறி, இறங்கும் வகையில் 2 "ஏரோ பிரிட்ஜ்'கள் கட்டப்பட்டுள்ளன. "ஏரோ பிரிட்ஜ்'கள் கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து பரிசோதனை அடிப்படையில் ஒரு நாள் இயக்கப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு இந்த "ஏரோ பிரிட்ஜ்'கள் கொண்டு வரப்பட்டுள்ளன


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Fri Sep 18, 2009 6:47 am 
Flying club to be started soon in Trichy, a parking lot is under construction

A private company will be handling the club, totally there would be 6 aircrafts for training of which 4 will be 2 seaters and 2 will be 6 seaters. These flights are supposed to reach soon.


Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Wed Sep 16, 2009 5:59 pm 
Villagers oppose land acquisition for airport


TIRUCHI: A fresh proposal on land acquisition for the next phase of expansion of the Tiruchi Airport has run into opposition from residents of villages behind the airport.

A large number of residents of Nathamadipatti and Keezhakurichi villages, whose lands are proposed to be acquired for the expansion of the airport, have registered their protest against the move by presenting a representation to Collector T.Soundiah on Monday. Talks held with the villagers by the Revenue and Airport Authorities, a couple of months ago, had ended abruptly owing to opposition from the villagers.

The Airports Authority of India has sought about 430 acres of land for the proposed expansion, envisaging the extension of the runway to 12,500 feet from 8,000 feet so that the airport, one of the non-metro airports identified for development and expansion, would be able to handle big (Code-E) aircrafts such as B747-400 and B777-300. Originally, lands on both the eastern and western sides were proposed to be acquired.

But residents on the Western side, to the front of the airport, had launched a campaign after Revenue authorities made an attempt to survey the lands to be acquired.

Subsequently, the AAI was asked to consider the extension of the airport runway across the Uyyakondan river (as has been done in Chennai), running behind the airport.

The latest protest by the villagers comes in the wake of a fresh proposal to confine the land acquisition to the Eastern side, to the rear of the airport. Residents of Nathamadipatti and Keezhakurichi, two main villages where the lands are to be acquired, say that their livelihood would be adversely affected if the lands were acquired.

A substantial portion of the lands were cultivable lands, irrigated by the Uyyakondan river, says A.Arul of Nathamadipatti. “Large extents of land from the villages have already been taken twice in the past for the airport development project,” he points out.

Villagers also apprehend that they would be rendered without a link road to Golden Rock and the city if the lands were acquired.

“The Nathamadipatti-Golden Rock Road is our main access road to the city and once the lands are acquired we would have to take a detour of over five to six km,” says A. Sathyamoorthy, another village resident.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Tue Sep 15, 2009 2:08 pm 
திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு தங்களது நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என கிழக்குறிச்சி பகுதி மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் ஆட்சியர் தா. சவுண்டையாவிடம் அப்பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

"விமான நிலையத்தின் கணிசமான நிலப் பகுதி கிழக்குறிச்சி கிராமத்தைச் சார்ந்தது. பல கால கட்டங்களில் இந்த நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதற்கு மேலும் நிலம் எடுத்தால், எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

இந்நிலையில், ஓடுதளப் பாதை விரிவாக்கம் முற்றிலுமாகக் கிழக்குப் பகுதியில் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் எங்களது மன நிம்மதியைப் பாதித்துள்ளது.

அவ்வாறு செய்தால், விவசாயம், அதைச் சார்ந்த தொழில்கள் செய்து வரும் இப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவர். விசாயம் பாதிக்கப்பட்டாலும், நத்தமாடிப்பட்டி - பொன்மலை சாலை துண்டிக்கப்பட்டாலும் இங்கு வாழ முடியாது. எனவே, சொந்த மண்ணைவிட்டு அகதிகளாக வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எங்களது கிராமத்தைக் காப்பாற்ற வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

பின்னர், ஊர் முக்கியப் பிரமுகர் மரியதாஸ் தெரிவித்தது:

இந்தப் பகுதிகளில் ஏறத்தாழ 500 வீடுகள் அமைந்துள்ளன. சுமார் 5,000 பேர் வசிக்கின்றனர். ஏறக்குறைய 500 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதை நம்பித்தான் வாழ்கிறோம்.

ஏற்கெனவே, விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 3 முறை நிலம் கையகப்படுத்தப்பட்டது. இனிமேல் இப்பகுதிகளில் நிலம் எடுக்கப்படமாட்டாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். வாக்குறுதியை மீறக் கூடாது' என்றார் மரியதாஸ்.


Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sat Sep 12, 2009 11:39 pm 
The following website provides list of flights at Trichy airport,but not accurate though.

http://www.flightstats.com/go/FlightStatus/flightStatusByAirport.do?&airportCode=TRZ


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
  
Reply with quote  
PostPosted: Sat Sep 12, 2009 11:03 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11599
Has thanked: 123 times
Been thanked: 74 times
Guest wrote:
can anyone? (particularly tp_admin) post all the current timings and current airlines and their routes and destinations of Trichy airport. It will be helpful for many people.


oops as such i dont have the details, i think the above link provided by one of our friend is useful.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 2841 posts ]  Go to page Previous  1 ... 274, 275, 276, 277, 278, 279, 280 ... 285  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 0 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum