Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Sun Feb 25, 2018 1:13 am


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 232 posts ]  Go to page Previous  1 ... 18, 19, 20, 21, 22, 23, 24  Next
Author Message
PostPosted: Thu Jul 05, 2012 6:32 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
manoj.trichy wrote:
trichyfan wrote:
Image

is this mannarpuram


Yes.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Jul 05, 2012 6:09 pm 
Offline

Joined: Wed Jul 04, 2012 6:32 pm
Posts: 43
Has thanked: 0 time
Been thanked: 0 time
trichyfan wrote:
Image

is this mannarpuram

_________________
dudezzz lets come and develop TRZ and TCR too the friendly neighbourhood


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Jul 05, 2012 1:02 pm 
Offline

Joined: Thu Jul 30, 2009 9:58 am
Posts: 536
Has thanked: 0 time
Been thanked: 18 times
Image


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Jul 05, 2012 1:01 pm 
Offline

Joined: Thu Jul 30, 2009 9:58 am
Posts: 536
Has thanked: 0 time
Been thanked: 18 times
Image

from Arul Murugan/SSC

http://www.skyscrapercity.com/showthread.php?t=1512879


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Jul 05, 2012 12:59 pm 
Offline

Joined: Thu Jul 30, 2009 9:58 am
Posts: 536
Has thanked: 0 time
Been thanked: 18 times
Image

Tentative alignment of U/c by-pass

Karur NH (Jeeyapuram) to Madurai NH (Panjapur) ( via Dindugal NH) - 19km
Madurai NH (Panjapur) to Thanjavur NH (Thuvakkudi) (via Mathur in Pudukottai NH ) - 27 Km

source:bajk
http://www.skyscrapercity.com/showthread.php?t=1512879&page=2


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed Jun 27, 2012 6:37 am 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4826
Has thanked: 41 times
Been thanked: 114 times
கொள்ளிடம் ஆற்றில் நான்குவழி பாலம்: ஆயத்தப்பணிகள் துவக்கம்

திருச்சி: திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றில் நான்கு வழி பாலம் கட்டுவதுக்கான ஆயத்தப்பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை துவக்கியது. திருச்சியிலிருந்து சென்னை செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்று பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். தற்போது, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் ஓரளவு போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் குறைந்துள்ளது. ஆயினும், கோவிலுக்கு செல்ல, திருச்சி நகருக்குள் வர என பெரும்பாலான வாகனங்கள் இந்த பாலம் வழியாகத் தான் வருகின்றன. கொள்ளிடம் ஆற்றுப்பாலம் கடந்த 1928ல் கட்டப்பட்டது. எனவே, மற்றொரு பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். திருவானைக்காவல் கொள்ளிடம் ஆறு பாலத்தின் அருகில் நான்கு வழி சாலை கொண்ட பாலம் 81 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தற்போது பாலம் கட்ட "நேர்கோடு' பார்க்கும் பணி நடக்கிறது.
எந்த இடத்திலிருந்து பாலம் கட்டினால் சரியாக இருக்கும் என்பதை நாகேஸ் என்ற தனியார் "கன்சல்டன்ஸி' மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 800 மீட்டர் நீளத்துக்கு 15 மீட்டர் அகலத்துக்கு இந்த பாலம் அமைய உள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கொள்ளிடம் ஆறு பாலத்தின் அருகே நான்கு வழி சாலை பாலம் கட்டுவதுக்காக இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. எந்த நேர்கோட்டில் பாலம் கட்டுவது என்பது குறித்து சர்வே செய்யப்படுகிறது. முன்னதாக பாலம் கட்டுவதுக்கான "எஸ்டிமேட்' (மதிப்பீடு) தயாரிக்கப்பட உள்ளது. அரசு கெஜட்டில் அறிவிப்பு வெளியானதும் பாலம் பணி விரைவில் துவங்கும்,'' என்றார்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Jun 24, 2012 10:27 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
Image

-bajk/ssc/http://tm.dinakaran.com/pdf/2012/06/23/20120623a_005107007.jpg


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed Jun 20, 2012 7:10 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
மந்தகதியில் ரயில்வே மேம்பாலப் பணிகள்

திருவெறும்பூர், ஜூன் 19: திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம், திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மந்தமாக நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் வழியாக தஞ்சை, திருவாரூர் கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான பேருந்துகளும், சரக்கு பெட்டக வாகனங்களும் சென்று வருகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக அமைக்க முடிவெடித்து, அந்த பணியை கடந்த 2007-ம் ஆண்டு ஆந்திரத்தில் உள்ள மதுகான் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. மேலும், இந்தப் பணியை 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், ஒப்பந்தம் போடப்பட்ட காலம் கடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையிலும் அரியமங்கலம், திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிவு பெறாமல் உள்ளன.

சாலையை அமைக்கும் போது, முதலில் அணுகு சாலை அமைக்க வேண்டும். அதன் பின்னரே சாலை அமைக்க வேண்டும். ஆனால், இந்த நிறுவனம் சில அரசியல் கட்சிகளின் நிர்பந்தத்தால் அணுகு சாலையை கைவிட்டு, நான்கு வழிச் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தற்போது, பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு இந்தச் சாலையில் அணுகு சாலை அமைக்க ஒப்புதல் அளித்தது.
சாலை பணியை முழுமையாக முடிக்காமல் துவாக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியில் வாகன வரி வசூலில் ஈடுபட்டு வருகிறது அந்த நிறுவனம்.

மேம்பாலப் பணிகள் தாமதம்:
திருச்சி அரியமங்கலம், திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதனால், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அரசும் சாலை அமைக்கும் அந்த நிறுவனத்திடம் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது, மேம்பாலப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், 4 மாதங்களாகியும் இன்னும் இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. சரக்கு வாகனங்கள் அவ்வப்போது சாலையில் தலைகீழாக கவிழும் நிலை ஏற்படுகிறது.
எனவே, அரசு உடனடியாக தலையிட்டு, அரியமங்கலம், திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sun Jun 03, 2012 7:32 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
Entry point to service lane at Ranjithapuram closed

Image
no entry:Temporary barricades being placed near G.Corner in the city on Saturday

Bowing to popular demand, the city traffic police and National Highways Authority of India (NHAI) on Saturday closed the entry point to the service lane at Ranjithapuram along the Tiruchi-Chennai bypass road ahead of the TVS Tollgate flyover in the city.

Service and consumer organisations have been demanding the closure of the entry point near Ranjithapuram to reduce congestion on the service lane, which was being used for two-way traffic. Entry of mofussil buses and other vehicles coming from Chennai and Thanjavur highway into the service lane at high speed at this point caused much difficulty to road users and made the service lane an accident-prone zone, they had contended. On Saturday, the police and NHAI officials after a joint inspection placed temporary barricades to prevent the entry of vehicles into the service lane.

All vehicles that have to reach the TVS Tollgate from the Tiruchi-Chennai bypass road would now have to turn left and go around the G.Corner junction to reach the service lane or go over the TVS Tollgate flyover to take a U-turn near Khajamian Higher Secondary School.According to sources, a cross-bar would soon be erected at the entry point to the service lane as a permanent measure to prevent entry of heavy vehicles.

The secretary of the Golden Rock Branch of the Consumer Protection Council, Tamil Nadu, Ghouse Baig, welcomed the move stating that it would be a big relief to motorists using the service lane.

He also urged the traffic authorities to take steps to relocate the bus halts close to the TVS Tollgate junction, which were hindering traffic movement.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue May 22, 2012 6:09 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11671
Has thanked: 124 times
Been thanked: 74 times
கிடப்பில் போடப்பட்ட அரை வட்டச்சாலை பணிகள் - திருச்சி நகரை சுற்றி அமைக் கப்பட இருக்கும் அரை வட்டச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

அரை வட்டச்சாலை
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் இருந்து தலைநகர் சென்னை, தமிழகத்தின் கடைகோடி பகுதியான கன்னியாகுமரி உள்பட எந்த இடத்திற்கு செல்லவேண்டுமானாலும் அதிக பட்ச பயண நேரம் 5 முதல் 6 மணி நேரங்கள் தான். அதுவும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின்னர் இந்த பயணநேரம் இன்னும் குறைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சிறப்புக்குரிய திருச்சி நகரில் இருந்து பிரிந்து செல்லும் திருச்சி& தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி& மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி& திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி& ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி& கரூர் தேசிய நெடுஞ்சாலை ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் வகையில் அரைவட்ட புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

26 கி.மீ நீளம்
இந்த அரை வட்டச்சாலையானது தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகில் தொடங்கி புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் சாலைகளை கடந்து கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே இணையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. 26 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த அரை வட்டச்சாலை அமைக்கப்பட்டு விட்டால் தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக சென்னை, கோவை, மற்றும் பல நகரங்களுக்கும் செல்லும் பஸ் லாரி, மற்றும் கனரக வாகனங்கள் திருச்சி நகருக்குள் வந்து போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கொள்ளாமல் எளிதாக இந்த அரை வட்டச்சாலை வழியாகவே சென்று விட முடியும்.

கருத்து கேட்பு கூட்டம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட இருக்கும் இந்த அரை வட்டச்சாலை பணி துவாக்குடியில் தொடங்கி புதுக்கோட்டை சாலை நோக்கி வந்து கொண்டு இருந்தது. ஆனால் திண்டுக்கல் சாலையையும் கரூர் சாலையையும் இணைக்கும் சாலையை எந்த வழியாக கொண்டு செல்வது என்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த சாலையை எந்த வழியாக கொண்டு செல்வது என்பது தொடர்பாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியும் பல மாதங்கள் ஓடிவிட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சாலை பணிகள் தொடர்பாக மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இணைந்து நடவடிக்கை
இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால் மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் தான் நாங்கள் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியும் என்கிறார்கள். மாவட்ட நிர்வாகமோ நிலம் கையகப்படுத்தும் பணியில் கோர்ட்டு, வழக்கு என்று ஏதாவது ஒரு காரணத்தை காட்டி தாமதித்து வருகிறது. அரை வட்டச்சாலையானது நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட இருப்பதால் பணி தொடங்கியதில் இருந்து எப்படியும் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என்ற சூழ்நிலை உள்ளது.

ஆனால் பல்வேறு காரணங்களால் சாலை அமைக்கும் பணியே இன்னும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பதால் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.

எனவே இந்த பணியை விரைவாக தொடங்க மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இணைந்து துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Source : Dailythanthi


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 232 posts ]  Go to page Previous  1 ... 18, 19, 20, 21, 22, 23, 24  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
cron
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum