Trichyportal.com

Exclusive Forum on Trichy. Contact Info : trichyportal@gmail.com
It is currently Mon Dec 18, 2017 10:15 pm


All times are UTC + 5:30 hours




Post new topic Reply to topic  [ 836 posts ]  Go to page Previous  1 ... 80, 81, 82, 83, 84  Next
Author Message
PostPosted: Tue Oct 29, 2013 10:20 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
வயலூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா: நவ.3ல் துவக்கம்!

திருச்சி: வயலூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 3–ந் தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது. முதல் நாளன்று காலையில் கணபதி ஹோமம், மாலையில் காப்பு கட்டுதல், அபிஷேக ஆராதனையும், இரவு சிங்காரவேலவர் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 4–ந் தேதி தினமும் காலையில் சிங்காரவேலவர் கேடயத்தில் அமர்ந்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், சுப்ரமணிய சுவாமிக்கு லட்சார்ச்சனையும், சண்முகா அர்ச்சனையும் நடக்கிறது. 4–ந்தேதி இரவு சிங்காரவேலவர் சேஷவாகனத்திலும், 5–ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் எழுந்தருளுகிறார். 6–ந்தேதி இரவு அன்ன வாகனத்தில் சிங்காரவேலவர் எழுந்தருளி யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சியும், 7–ந்தேதி இரவு வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுகசூரனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 8–ந்தேதி நடக்கிறது.

source: dinamalar


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Tags
Trichy Temple festivals , Spiritual events in Trichy, Bajans in Trichy, Prayer and Medication classes n Trichy
PostPosted: Fri Oct 25, 2013 6:28 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
ஸ்ரீரங்கம்,சமயபுரம்,மலைக்கோட்டை கோவில்களில் உண்டியல் திறப்பு

ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை கோவில்களில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துவார்கள். அவ்வாறு உண்டியல்களில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, சீனிவாசன், கஸ்தூரி, உதவி ஆணையர் முல்லை ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கோவில் பணியாளர்களும், தொண்டு நிறுவனத்தினரும் இப்பணியில் ஈடுபட்டார்கள். இதில் ரூ.52 லட்சத்து 48 ஆயிரத்து 294 ரொக்கமும், 425 கிராம் தங்கம், 1012 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தன.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்களை திறந்து அதில் இருக்கும் பணத்தை எண்ணும் பணி கோவில் மண்டபத்தில் மண்டல இணை ஆணையர் புகழேந்திரன், சமயபுரம் இணை ஆணையர் தென்னரசு, அரியலுர் உதவி ஆணையர் கோதண்டராமன், புதுக்கோட்டை உதவி ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியல் திறந்து அதில் இருந்த பணத்தை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.காணிக்கை உண்டியல்களில் ரூ.41 லட்சத்து 30 ஆயிரத்து 79–ம், 2 கிலோ 11 கிராம் தங்கமும், 4 கிலோ 90 கிராம் வெள்ளியும் இருந்தன. வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 52–ம் இருந்தது.

திருச்சி மலைக்கோட்டை கோவிலில் மாணிக்க விநாயகர் சன்னதி, தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை, உச்சிப்பிள்ளையார் சன்னதி, நந்தி கோவில் உள்ளிட்ட சுவாமிகள் சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் கடைசியாக கடந்த ஆகஸ்டு மாதம் 29–ந் தேதி உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கோவிலில் உள்ள 27 உண்டியல்களை உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல்பாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணியில் கோவில் பணியாளர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் பலர் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 507 ரூபாய் ரொக்கம், 11 கிராம் தங்கமும், 100 கிராம் வெள்ளியும், 700 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 24, 2013 9:22 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Attempt to steal bronze idol from Rockfort Temple

Image

Unidentified persons made an attempt to steal a bronze idol of Goddess Tripurasundari from the famous Rockfort Arulmigu Thayumanaswamy Temple located in the heart of the city on Wednesday.

Unable to take away the idol, weighing about 100-kg, after having placed it inside a backpack type bag, the culprits left it at the temple premises itself.

The ‘utsava’ idol, said to have been made in the 19th century, was kept on a ‘medai’ (stage) within the ‘praharam’ of Lord Thayumanaswamy’s shrine situated in the middle part of the rock-cut temple which attracts thousands of devotees everyday. The idol is about two feet and a half tall but weighs nearly 100 kg.

At the base of the hillock is the shrine of Lord Manicka Vinayagar, while the shrine of Lord Ucchi Pillaiyar is situated on top of the hillock. The temple has a separate shrine for Goddess ‘Mattuvar Kuzhali Amman’ and other sannidhis.

The burglary bid came to light at around 8 am after a devotee noticed the idol missing from the stage and found a black bag at the spot.

Getting suspicious, the devotee raised an alarm alerting the temple staff, said the shrine employees. Upon opening the bag that was stuffed with an unclean and foul-smelling pant and a shirt, the temple staff found the idol inside.

Upon getting information, police officers inspected the spot and conducted enquiries. The investigators have taken possession of the bag and the temple authorities have filed a complaint to the Fort (Crime) police.

The idol is taken out in a procession within the Lord Thayumanaswamy praharam every Friday. Temple staff said the grille gate of the stage, where the idol was kept, is usually opened in the morning hours to offer ‘neivedhyam’ for the idol once the pooja for Lord Thayumanaswamy is over.

A ‘parihara’ pooja was immediately performed in the shrine following the burglary bid.

A temple official said this was the first time that a theft attempt was made there.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Oct 19, 2013 6:30 pm 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
செட்டியார் சாமி தெரியுமா ?

Image

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ‘மங்கலம்’ எனும் கிராமத்தில் அரவாண்டி அம்மன் கோயில் உள்ளது. இத்தலத்தில் வேறு எந்த ஆலயத்திலும் தரிசிக்க முடியாத மீசை யுடன் கூடிய புத்தரை தரிசிக்கலாம். தியான நிலையிலிருக்கும் இந்த புத்தர் சிலையை பக்தர்கள் ‘செட்டியார் சாமி’ என அழைத்து வழிபடுகின்றனர்.


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Oct 19, 2013 10:08 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Large turnout for urs

Devotees from across the district participated in the annual urs festival at the Hazrath Chan Masthan Dargah on the Madurai Road in the city on Thursday. Raathib and Moulood shariff recital by devotees from Nagore marked the celebrations. Devotees led by M.H. Raheem, secretary of the dargah, anointed the sandal paste on the tomb of the Sufi saint. A special prayer for world peace was recited at the end.

http://www.thehindu.com/todays-paper/tp ... 250075.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 10:16 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
Image

source: dinamani


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Thu Oct 17, 2013 9:06 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
‘Festival of sacrifice’ celebrated with gaiety

Image

Eid-uz-Zuha, well-known as Bakrid, was celebrated with usual gaiety in various parts of central districts on Wednesday.

The festival marks the end of annual Haj pilgrimage. Eid-uz-Zuha is known as the “festival of sacrifice” and it commemorates Prophet Abraham’s faith and devotion to God.

According to Muslim belief, god directed Prophet Abraham to sacrifice his son. Although he was a good man and loved his son; his faith and devotion to god was strong enough that he would accommodate god’s request. Prophet Abraham’s willingness to sacrifice his own son for god’s sake caused god to spare his son’s life and a lamb was sacrificed in his place.

Hajj is a symbol of submission to Allah and Muslim Unity. It is an exemplary example of equality and unity when pilgrims gather together in Makkah. Muslims who belong to different nations, cultures, social, and economical status are all dressed up in two pieces of cloth. All perform the same rites. There was no difference of rich and poor, all stand in front of their lord in submission and humility.

A large number of Muslims participated in the special Qutba prayers held in the Idgah Maidan in Cantonment in the city on Wednesday. The Imam who led the prayer urged Muslims to spread the message of peace, harmony, and goodwill among all sections of the society. Dua was recited at the end for peace and communal harmony.

A large congregation of Muslims offered prayers in various mosques in the city, including Big Chowk Mosque, Hazrath Natharvali Dargah Mosque, Tennur High Road Mosque, Jamal Mohamed College Mosque, Arabic College Mosque, and so on, and across the district.

http://www.thehindu.com/todays-paper/tp ... 242440.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Wed Oct 16, 2013 9:03 am 
Offline

Joined: Thu Jan 22, 2009 8:43 pm
Posts: 11601
Has thanked: 123 times
Been thanked: 74 times
Book on temple history released

Image

A book on the temple history of Sri Naganathaswami Temple in Tiruchi city ( sthala varalaru ) was released at a function held here on Monday. R.Manoharan, MLA and chief whip of the ruling party in the Assembly, released the book and the first copy was received by Balasubramania Sivachariar. The book brought out by Agasthiar Publications describes the importance of Sri Naganathaswami Temple and the significance of offering worship to the presiding deity on specific occasions. It also describes, with a map of the temple, the locations of all shrines in the temple complex. S.Gopalakrishnan and G.Girish, Agasthiar Publications, and Gopalakrishnan, industrialist, were present.

http://www.thehindu.com/todays-paper/tp ... 239345.ece


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Tue Oct 15, 2013 10:16 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் நவராத்திரி விழா நிறைவு தங்க, வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் நவராத்திரி நிறைவு நாள் விழா நடந்தது. இறுதி நாளில் தங்க, குதிரை வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஸ்ரீரங்கம் கோவில்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 5–ந் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. கடந்த 10 நாட்களாக நடந்து வந்த இந்த விழா நேற்று நிறைவடைந்தது. நேற்றைய தினம் சிங்கர் கோவிலில் விஜயதசமி மண்டபம் அருகே வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து சாத்தார வீதி. கடைவீதி. வழியாக பெருமாள் மூலஸ்தானம் வந்தடைந்தார். அதன் பிறகு திருமஞ்சனம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், அறங்காவலர்கள் ரெங்காச்சாரி சீனிவாசன், கஸ்தூரி தலைமையில் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

திருவானைக்காவல் கோவில்

திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர்–அகிலாண்டேஸ்வரி கோவிலிலும் கடந்த 5–ந் தேதி நவராத்திரி பெருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்பாள் அலங்கார வழிபாடும் முத்தமிழ்க் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. நவராத்திரியின் நிறைவு விழா நேற்று நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக அம்பு சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் புறப்பட்டு வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு பக்தி சொற்பொழிவும் 7 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும் 7.30 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையரும் செயல் அலுவலருமான முல்லை, உதவி ஆணையர் மற்றும் தக்கார் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் கோவில் அலுவலர்கள், அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று முடிவடைந்தது. நேற்று இரவு 7.30 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி வன்னிமரம் வந்து அடைந்தார். அதைத் தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் இறுதிநாளான நேற்று திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தென்னரசு தலைமையில் ஆலயப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

source: dailythanthi


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
PostPosted: Sat Oct 12, 2013 12:31 pm 
Offline

Joined: Mon Mar 08, 2010 4:55 pm
Posts: 4819
Has thanked: 41 times
Been thanked: 114 times
திருவானைக்காவல் கோயிலில் தரிசன முறையில் மாற்றம்

திருச்சி, : திருவானைக்காவல் கோயிலில் தரிசன முறையில் கோயில் நிர்வாகம் சார்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சி அருகே உள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில். கடந்த 2வது ஆடி வெள்ளிக்கிழமை முதல் அம்மன் மற்றும் சுவாமி சன்னதியில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்வதில் கோயில் நிர்வாகம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஜம்புகேஸ்வரர் மூலவர் சன்னதிக்கு பொது தரிசனத்தில் செல்வோர் அர்த்த மண்டபம் உள்ளே செல்ல முடியாது. சுவாமியை நவ துவாரம் வழியாக தான் தரிசனம் செய்ய முடியும். உள்ளே சென்று தரிசனம் செய்ய சிறப்பு கட்டணமாக ரூ.10, ரூ.25 டிக்கெட் வாங்க வேண்டும்.

அம்மனை தரிசிக்கவும் ரூ.10, ரூ.50 கட்டணம் செலுத்தினால் தான் அர்த்த மண்டபம் உள்ளே சென்று தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. தூரத்தில் இருந்து தரிசிக்க வேண்டியிருந்ததால் பக்தர்கள் வேதனைப்பட்டனர். கட்டண முறைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கோயில் உதவி ஆணையர் முல்லை, இந்து அறநிலையத்துறை கமிஷனரின் அனுமதிப்பெற்று, பொது தரிசனத்தில் செல்வோரும் அர்த்த மண்டபம் உள்ளே சென்று மூலவரின் அருகில் தரிசனம் செய்யும் மாற்றத்தை கொண்டு வந்தார். இது பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. திருவானைக்காவலை சேர்ந்த பக்தர் கண்ணன் கூறுகையில், ‘கட்டணம், விரைவு தரிசனத்திற்கு மட்டுமே தவிர, பக்தர்களிடம் வித்தியாசத்தை காட்டுவதற்காக உருவாக்கப்பட்டது இல்லை என்பதை கோயில் நிர்வாகம் உணர்ந்துள்ளது. இது போன்ற நிலையை தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்துக் கோயிலிலும் இந்து அறநிலையத்துறை கொண்டு வரவேண்டும்‘ என்றார்.

source: dinakaran


Share on FacebookShare on TwitterShare on Google+Report this post
Top
 Profile  
Reply with quote  
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 836 posts ]  Go to page Previous  1 ... 80, 81, 82, 83, 84  Next

All times are UTC + 5:30 hours


Who is online

Users browsing this forum: ilovetrichy and 2 guests


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Powered by phpBB® Forum Software © phpBB Group

Forum